×

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா 3 பதக்கங்கள் வெல்லும்: முன்னாள் சாம்பியன் நம்பிக்கை

சென்னை: செல் ஒலிம்பியாட் போட்டியில் 6 பதக்கங்களில் இந்திய அணி 3 பதக்கங்களை வெல்லும் என்று முன்னாள் சாம்பியன் சூசன் போல்கர் தெரிவித்துள்ளார்.  44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்கிறது. இதில், 188 நாடுகளை சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்தியா வீரர்களின் பலம் அதிகரித்துள்ளதால் 6 பதக்கங்களில் 3 பதக்கங்களை இந்தியா வெல்லும் என்று முன்னாள் ஒலிம்பியாட் சாம்பியன் சூசன் போல்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ரஷ்ய மற்றும் சீன வீரர்கள் இல்லாததால், இந்திய பெண்கள் அணியினர் தங்க வெல்ல சிறப்பான வாய்ப்பு அமைந்துள்ளது.  பெண்கள் பிரிவில் முதன்முறையாக பதக்கம் வெல்ல இந்திய அணியினர் கோனேரு ஹம்பி, துரோணவல்லி ஹரிகா, வைஷாலி, டானியா சச்தேவ், பக்தி குல்கர்னி ஆகியோர் எதிர்நோக்கி உள்ளனர்‘ என்று தெரிவித்தார். ஒலிம்பியாட் போட்டியில் அதிக பதக்கங்கள் வென்ற அலங்கரித்த்வர் சூசன் போல்கர். அவர் மொத்தம் 12 பதக்கங்களை வென்றுள்ளார் (5 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம்) என்பது குறிப்பிடத்தக்கது. …

The post 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா 3 பதக்கங்கள் வெல்லும்: முன்னாள் சாம்பியன் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : India ,44th Chess Olympiad ,Chennai ,Cell Olympiad ,Susan ,Dinakaran ,
× RELATED சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தடையை...